ஆண்டின் முதல் 08 மாதங்களில் அதிக வருமானம் ஈட்டிய கட்டுநாயக்கா விமான நிலையம்!

இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், ஆண்டின் முதல் 8 மாதங்களில் பயணிகள் போக்குவரத்தில் 14 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 58,37,351 பயணிகள் கையாளப்பட்டதாகவும், 2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 66,30,728 பயணிகள் கையாளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 13.59 சதவீதம் அதிகரிப்பை காட்டுகிறது.
2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக பயணிகள் கையாளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளைவரவிருக்கும் சுற்றுலாப் பருவத்தின் தொடக்கத்துடன், புதிய விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
மேலும் வரவிருக்கும் சுற்றுலாப் பருவத்திலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



