புதிய வாகன எண் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விளக்கம்!
புதிய வாகன எண் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08.10) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
புதிய வாகன எண் தகடுகளை வழங்கும் செயல்முறை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், செப்டம்பர் 30, 2025 வரை 165,512 வாகன எண் தகடுகள் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "வாகன எண் தகடுகளை வழங்குவதில் நாங்கள் திட்டமிட்டதை விட நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய வாகன எண் தகடுகளில் 07 சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
இலங்கையில் இந்த 07 அம்சங்களின் சோதனையை மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்தோம். அவர்கள் சுமார் மூன்று மாதங்கள் எடுத்தனர். மேலும் அவர்களால் அவற்றில் 06 மட்டுமே செய்ய முடியும் என்று அவர்கள் கூறினர்.
எனவே, 07வது சோதனையை சர்வதேச அளவில் நடத்த வேண்டியிருந்தது. அதனால்தான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
