ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

#SriLanka #Arrest #Police #Mullaitivu #Lanka4
Mayoorikka
1 week ago
ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில், ஒரு பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 592வது இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, ஏ-9 வீதியின் கொக்காவில் பகுதியில் நேற்று, குறித்த பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் இருந்த வேளை, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 குறித்த பொலிஸ் அதிகாரி, தனது உடமையில் 92 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 அத்தோடு, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 சமீபத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த குறித்த நபருக்கு, பொய் வழக்கு பதிவு செய்தல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக செயற்படுதல், இலஞ்சம் பெறுதல் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் வெலிஓயா பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

 இந்நிலையில், குறித்த விடயங்களை ஆதாரப்படுத்தும் வகையில் அவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 எனவே, குறித்த பொலிஸ் அதிகாரி மீது உயரதிகாரிகள் உடனடியாக உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!