ஐ.நாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

#SriLanka #UN #Lanka4 #Human Rights
Mayoorikka
1 week ago
ஐ.நாவில்  இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான A/HRC/60/L.1/Rev.1 தீர்மானம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

 மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் வாக்கெடுப்பு இல்லாமல் இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் (OHCHR) அலுவலகத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் திருத்தப்பட்ட ஐ.நா. தீர்மானத்திற்கு 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன. 

 குறித்த புதுப்பிக்கப்பட்ட வரைவு ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டது. தீர்மானத்தின் முக்கிய அனுசரணையாளர்களாக பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா உள்ளிட்ட நாடுகள் காணப்படுகின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!