பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம் - 26 பேர் பலி!
மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். செபு நகர கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தில் மேலும் 147 பேர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட விசாயாஸ் பகுதியில் அமைந்துள்ள செபு நகரில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
 கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
                        
                    
                        
                    
                        
                    
                        
                    
                
                
                
                
                
                                    