சம்மாந்துறை பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை:பலர் கைது, 20 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமை மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகளின் கீழ் பலரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (26) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான வீதியில் நடைபெற்றது. சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் நடவடிக்கையின் போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சில மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட சான்றுப் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சம்மாந்துறை, சவளக்கடை, மத்திய முகாம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
