வைத்தியசாலைகளில் உள்ள மலசல கூடங்களை சுத்தம் செய்து திருத்த வேண்டும்! அனுர கவனத்தில் எடுப்பாரா?

ஒரு நாட்டில் வைத்தியசாலை என்பது நோயாளிகள் செல்லும் ஆலயம் என கூறலாம் ஏனெனில் அவர்களுடைய உயிரை காப்பாற்றும் தெய்வங்கள் அங்கு தான் இருக்கின்றார்கள்.
அவர்கள் வைத்தியர்களாக இருந்தாலும் சரி தாதியர்களாக இருந்தாலும் சரி மிகவும் அக்கறையுடன் நோயாளர்களை கவனிக்கின்றார்கள்.
தீவிர நோயாளிகள் கூட வைத்தியசாலைகளிற்கு சென்று உயிரை திரும்பப் பெற்று வருகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. அந்தவைகயில் நோயார்களுக்கு கோவிலாக இருக்கும் வைத்தியசாலை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
இந்தநிலையில் சில வைத்தியசாலைகளில் உள்ள மலசல கூடம் மிகவும் அசுத்தமானான் நிலையில் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இதுபற்றி நமது லங்கா4 ஊடகத்திலும் சமூக ஊடகத்திலும் பல செய்திகள் பதிவேற்றியிருக்கின்றோம். பல பாராளுமன்ற உறுப்பினர்களும் இது பறி பேசியிருக்கின்றார்கள்.
அவ்வாறிருந்தும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டகளப்பு, வவுனியா போன்ற பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலை மாலா சலகூடங்கள் மிகவும் அசுத்தமான முறையில் காணப்படுகின்றது.
இந்தநிலையில் வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் இதனை கவனத்தில் கொண்டு உரிய ஊழியர்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் வைத்தியசாலைக்கு செல்லும் ஒவ்வொருவரும் அதாவது நோயாளியாக இருக்கட்டும் அல்லது அவர்களை பார்வையிட செல்பவர்களாக இருக்கட்டும் ஒவ்வொருவரும் மிகவும் போறுப்புணர்வுடன் செயற்பட்டு உங்கள் வீடுகளில் உள்ள மலசல கூடம் போல் அதனை பாவித்து மிகவும் சுத்தமாக பயன்படுத்த வேண்டும்.
இதனை ஒவ்வொரு தனி மனிதனும் கவனத்தில் எடுத்து பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டால் ஒவ்வொரு வைத்தியசாலைகளில் உள்ள மலசல கூடங்களும் மிகவும் சுத்தமாக இருக்கும்.
அத்துடன் சில வைத்தியசாலைகளில் உள்ள மலசல கூடங்கள் பாவனைக்கு உதவாத நிலையில் மிகவும் பழைய நிலையில் உள்ளன. அதனை இந்த அரசாங்கம் கவனத்தில் எடுத்து அதனை பாவனைக்கு உகந்த நிலையில் திருத்திக் கொடுத்து ஆவண செய்ய வேண்டும்.
இதனை ஊழலிற்கு எதிராக போராடும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கவனத்தில் எடுப்பாரா?
(வீடியோ இங்கே )
அனுசரணை



