அநுரவுக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடைல் இருதரப்பு பேச்சுவார்த்தை!

#SriLanka #Pakistan #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
2 months ago
அநுரவுக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடைல் இருதரப்பு பேச்சுவார்த்தை!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நியூயோர்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் புதன்கிழமை (24) பிற்பகல் நடைபெற்றன.

 இதன்போது, பாகிஸ்தான் பிரதமர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அமோகமாக வரவேற்றதுடன், இலங்கை-பாகிஸ்தான் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

images/content-image/1758764863.jpg

 வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!