தொழிற்சங்க போராட்டம்: இலங்கை மின்சார சபையினர் எடுத்துள்ள தீர்மானம்
#SriLanka
#Protest
#strike
#Lanka4
#ElectricityBoard
Mayoorikka
2 hours ago

இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள், தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை வேலைநிறுத்தமாக விரிவடையாது என்று தெரிவித்துள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (24) பிற்பகல் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சட்டப்படி வேலை செய்யும் (Work-to-Rule) போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்திற்கு எதிராக, மின்சார தொழிற்சங்கங்கள் பல நாட்களாக இந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



