இயக்கச்சி சந்தியில் சேதமடைந்த வீதி சமிஞ்சை: மீண்டும் அமைக்க மக்களின் கோரிக்கை!

கிளிநொச்சி இயக்கச்சி சந்தியில் காணப்படும் வீதி சமிஞ்சை ஒன்று விபத்தின் காரணமாக பல நாட்களாக சேதம் அடைந்து காணப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில் பல நாட்களுக்கு முன்பு இயக்கச்சி சந்தி பகுதியில் காணப்படும் வீதி சமிஞ்சை ஒன்றின் மீது எதிர்பாரா விதமாக டிப்பர் வாகனம் மோதியது. சம்பவம் குறித்து பளை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டு பளை பொலிசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு சென்றனர்.
குறித்த வீதி சமிஞ்சை சேதமடைந்து காணப்படுவதாகவும் முன்னாள் பாடசாலை காணப்படுவதால் இதனை கருத்தில் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் அருகில் பாடசாலையை காட்டும் வீதி சமிஞ்சையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
ஆகவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறித்த வீதி சமிஞ்சையை உரிய முறையில் மீண்டும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்
(வீடியோ இங்கே )
அனுசரணை



