மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்- சுற்றி வளைத்த சுகாதார அதிகாரிகள்!

#SriLanka #Mannar #Arrest #Health #Food #Hotel #ADDAADS #SHELVAFLY
Lakhi
2 hours ago
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்- சுற்றி வளைத்த சுகாதார அதிகாரிகள்!

மன்னார் நகர பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மன்னார் நகரசபை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் கண்காணிக்கப்பட்ட நிலையில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காரணமாக உணவகம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மன்னார் -தலை மன்னார் பிரதான வீதியில் அமைந்திருந்த குறித்த உணவகம் உரிய முறையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மன்னார் நகரசபை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற் கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அகப்பட்டது.

குறித்த உணவகம் எந்த ஒரு வியாபார உரிமமும் இன்றி இயங்கி வந்ததுடன் உணவகத்தின் கழிவு நீர் உரிய விதமாக அகற்றப்படாமல் புழுக்கள் இளையான் உருவாகியும் அதே நேரம் ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள் தயாரிக்கப் பட்டிருந்தமை , அத்துடன் உணவு பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சிய படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு எதிராகவும் உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!