இன்று சூழல் நட்பு மர நடுகை மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தகரை பகுதியில் ஆரம்பம்.
#SriLanka
#Mannar
#Tree
#Plant
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
4 hours ago

பசுமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஓராயம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பாலவி தீர்த்தக்கரை பகுதியில் சூழல் நட்பு மர நடுகை இன்று சனிக்கிழமை (20) காலை 11 மணியளவில் இடம் பெற்றது.
ஓராயம் நிறுவனத்தின் தலைவர் மோசஸ் மரியதாசன் தலைமையில் திருக்கேதீஸ்வரம் ஆலய அறங்காவலர்கள், ஓராயம் நிதியம் மற்றும் மன்னார் வனத் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் குறித்த மர நடுகை நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ஆரம்ப நிகழ்வுகள் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.அதனைத்தொடர்ந்து தீர்த்தக்கரை பகுதியில் சூழல் நட்பு மர நடுகையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



