யாழில் சாரதி பயற்சி நிலையங்கள் முறையாக செயற்படுகின்றனவா?

#SriLanka #Lanka4 #Driver
Mayoorikka
2 hours ago
யாழில் சாரதி பயற்சி நிலையங்கள் முறையாக செயற்படுகின்றனவா?

யாழ்ப்பாணத்தில் உள்ள சாரதி பயிற்சி நிலையங்கள் மாணவர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்குகின்றனவா என்ற சந்தேக எழுந்துள்ளது.

 ஏனெனில் அதிகளவில் விபத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அதிகளவில் இடம்பெறுகின்றன என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 சில சாரதி பயிற்சி நிலையங்கள் பணத்தினை வாங்கி விட்டு முறையாக பயிற்சி அளிக்காமல் சாரதி அனுமதி பத்திரத்திற்கு ஏற்பாடு செய்து அவர்களுக்கு வழங்கி வைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதன்காரணமாக சிறிய வயது இளைஞர்கள் வீதி சட்டதிட்டங்கள் தெரியாமல் வீதியில் வாகனங்களை செலுத்துவதன் ஊடாக அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

 குறிப்பாக FZ மோட்டார் சைக்கிள்களின் அதிவேக சாரதித்துவமே விபத்துக்களை அதிகளவு ஏற்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக இந்தவகையான மோட்டார் சைக்கிள்கள் இளவயதினரே அதிகளவில் அதாவது 21 வயது நிரம்பாத இளைஞர்களும் வீதியில் ஓட்டிச் செல்கின்றனர். இதன் காரணமாக அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

 அத்துடன் மருத்துவ சான்றிதழ் கூட சரியான முறையில் வழங்கப்டுவதில்லை. பார்வை குறைபாடு உடையவர்களுக்கு பணத்தினை பெற்றுவிட்டு அவர்களுக்கு சாரதி அனுமதி பத்திரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றனர்.

 இவ்வாறான பொறுப்பற்ற செயல்களினால் அதிகளவிலான உயிர்கள் பறிக்கப்படுகின்றன. எனவே இந்த நடைமுறைகளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு கடுமையான நடவடிகைகளை எடுக்க வேண்டும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!