முக்கிய செய்தி! யாழில் உள்ள சாரதி பயிற்சி நிலையங்கள் குறித்து கடுமையாகவுள்ள நடைமுறை

யாழ்.மாவட்டத்தில் செயற்பட்டுவரும் சாரதி பயிற்சிப் பாடசாலைகளின் தகுதி குறித்து பொலிசார் கடுமையாக கண்காணிக்க வேண்டும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விபத்துக்களில் அதிகளவில் தமிழ் மக்களே பலியாகி வருவதும் புள்ளி விபரங்களில் அறிய முடிகின்றது. எனவே சாரதிப் பயிற்சி நிலையங்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து கூறிய யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் - யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூடியளவான விபத்துக்கள் இரு சக்கர ( மோட்டார் சைக்கிள்) வாகனங்களாலேயே ஏற்படுகின்றன.
குறிப்பாக FZ மோட்டார் சைக்கிள்களின் அதிவேக சாரதித்துவமே விபத்துக்களை அதிகளவு ஏற்படுத்தியதாக தகவல்கள் இருக்கின்றன.
மேலும் பிரதான வீதிகளில் அதி வேகத்தில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் கிளை வீதிகளுக்கு திரும்பும் சந்தர்ப்பங்களிலும் கிளை வீதிகளில் இருந்து பிரதான வீதிகளுக்கு பிரவேசிக்கும் சந்தர்ப்பங்களில் தான் இந்த விபத்துக்களும் மரணங்களும் சம்பவிக்கின்றன. விபத்துக்களில் அதிகளவில் தமிழ் மக்களே பலியாகி வருவதும் புள்ளி விபரங்களில் அறிய முடிகின்றது.
எனவே சாரதிப் பயிற்சி தொடர்பில் அதிக அக்கறை செலுத்தவேண்டியதாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். இதேவேளை யாழ் மவட்ட மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி, யாழ்.மாவட்டத்தில் 13 சாரதிப் பயிற்சி நிலையங்கள் பதிவுசெய்யப்பட்டு செயற்பட்டு வருகின்றன. இவற்றுள் இரு பயிற்சி நிலையங்கள் அனுமதியை மீள் புதிப்பு செய்யாதிருக்கின்றன.
அவை குறித்து பொலிசாருக்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிலையில் குறித்த பயிற்சி நிலையங்கள் முறையாக பயிற்சி வழங்குகின்றனவா அல்லது முறைகேடுகள் இருக்கின்றனவா என்பது குறித்து பொலிஸார் உன்னிப்பாக அவதானம் செலுத்த வேண்டும்.
அதேநேரம் வாகனங்களின் தரம், பாதுகாப்பு அமைப்புகளின் அவசியம், தூர சேவை வாகனங்களுக்கு 48 மணி நேர செல்லுபடியாகும் சோதனை சான்றிதழ், இருக்கை பட்டிகள் உள்ளிட்டவற்றின் அவசியம் குறித்தும் சேதனைகள் முன்னெடுக்கப்பட்டு விபத்துக்களை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



