இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்!

இலங்கையின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இது நாட்டின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லைக் குறிப்பதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் செயற்படும் மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் இன்ஸ்டிடியூட் ஃபார் மொடர்ன் டெக்னாலஜிஸின் (Arthur C. Clarke Institute for Modern Technologies) வழிகாட்டுதலின் கீழ் இலங்கை பொறியியலாளர்கள் குழுவால் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.
‘BIRDS-X DRAGONFLY’ என பெயரிடப்பட்ட இந்த நனோ செயற்கைக்கோள், ஆகஸ்ட் 24 ஆம் திகதியன்று நாசாவினால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் இந்த செயற்கைக்கோள் இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2:15 மணிக்கு ISS இலிருந்து சுற்றுப்பாதையில் செலுத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்வு ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
முன்னதாக, இலங்கை 2019 இல் அதன் முதல் நனோ செயற்கைக்கோளான ராவணா-1 ஐ ஏவியமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது செயற்கைக்கோளான KITSUNE 2022 இலும் ஏவப்பட்டது
(வீடியோ இங்கே )
அனுசரணை



