ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொண்ட அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை ஜனாதிபதி உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள், பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்று ஜனாதிபதி கூறிய நிலையில், அந்த பெயர்களை ஜனாதிபதி உடனடியாக நாட்டிற்கு துல்லியமாக வெளியிட வேண்டும் என்று முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொண்ட அரசியல்வாதிகள் யார்? பாதாள உலகத்திலிருந்து பணம் வாங்கிய அரசியல்வாதிகள் யார்? பாதாள உலகத் தலைவர்களின் வீடுகளுக்குச் சென்ற அரசியல்வாதிகள் யார்? ஜனாதிபதி, அவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளை தனித்தனியாக நாட்டிற்கு வெளியிட வேண்டும்.
அவ்வாறு செய்யாமல், அரசியல்வாதிகள் பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்று வெறுமனே கூறுவது சரியானதல்ல என்று முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் மீது அவர்களின் பெயர்களை அடையாளம் காணாமல் பொதுவான குற்றச்சாட்டுகளை சுமத்துவது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஒரு பெரிய அநீதி என்றும், எனவே பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்ட அரசியல்வாதிகளை தனித்தனியாக நாட்டுக்கு வெளிப்படுத்த ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )



