725,000 ரூபாய் மதிப்புள்ள போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது
#SriLanka
#Arrest
#Fake
#currency
Prasu
1 hour ago

ஹபரணை பொலிஸார் அநுராதபுரத்தின் மதவாச்சிய பகுதியில் நடத்திய சோதனையில் 145 போலி 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் மற்றும் அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்படும் பல மடிக்கணினிகள், கணினிகள் மற்றும் பிற உபகரணங்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி நீண்ட காலமாக நடந்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் மதவாச்சிய பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )



