அனுரவின் அதிரடி: பெண்களுக்கு போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு!
#SriLanka
#Women
#Lanka4
#Workers
Mayoorikka
1 hour ago

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர்,
25 பேருந்து டிப்போக்களை நவீனமயமாக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. SLTB ஊழியர்களின் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 750 புதிய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
SLTB ஒரு இலாபகரமான நிறுவனமாக மீண்டும் கட்டியெழுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



