கடுமையான மூடுபனி - மலைநாட்டிற்கு செல்வோருக்கு எச்சரிக்கை!
#SriLanka
#weather
#NuwaraEliya
#Warning
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (16) இரவு முதல் பெய்து வரும் கனமழை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக பொதுமக்களின் வாழ்க்கை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டன்-நுவரெலியா மற்றும் அட்டன்-கொழும்பு பிரதான சாலைகள் மற்றும் பக்கவாட்டு சாலைகளில் இந்த அடர்ந்த மூடுபனி நிலை நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சாலைகளில் வாகனம் ஓட்டும்போது, முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து கொண்டு மெதுவாகவும் கவனமாகவும் வாகனம் ஓட்டுமாறு அட்டன் காவல்துறை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் சாரதிகளைக் கேட்டுக்கொள்கிறார்கள்.
(வீடியோ இங்கே )



