வெளிநாடுகளில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சிறப்பு கௌரவம் வழங்கப்படுகின்றது! மைத்திரி

#SriLanka #Sri Lanka President #Maithripala Sirisena #Lanka4
Mayoorikka
2 hours ago
வெளிநாடுகளில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சிறப்பு கௌரவம் வழங்கப்படுகின்றது! மைத்திரி

நான் தற்போது ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கின்றேன். எனக்கு வேறு எந்த வருமான மூலமும் இல்லை. நான் செல்லவுள்ள வீட்டின் நிர்மானப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

அவை நிறைவடைந்த பின், விரைவில் இந்த வீட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வேன். பொலன்னறுவைக்கு செல்ல விரும்பினாலும் கொழும்பில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டுள்ளது என மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.

 தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இந்த வீட்டிலிருந்து செல்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை.

 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகளைத் தவிர மேலும் பல அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகள் இந்த அரசாங்கத்தால் மீளப் பெறப்பட்டாலும், அவை பயன்பாடின்றி கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. 

தற்போது அவற்றில் குரங்குகள் தான் வாழ்கின்றன.. உலகின் ஏனைய நாடுகளில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வாறான பாதுகாப்புக்களும் கௌரவமும் வழங்கப்படுகிறது என அரசாங்கத்தினர் பார்க்க வேண்டும். 

எனது ஆட்சி காலத்தில் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட முக்கிய பாதாள உலகக் குழுவினரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். 

 நான் உயிர் வாழும் வரை சுதந்திர கட்சி அங்கத்தவனாகவே இருப்பேன். அரசியலில் இருந்தாலும் இனி செயற்பாட்டு அரசியலில் ஈடுபட மாட்டேன். முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் எனக்காக 2024ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் உண்மைக்கு புறம்பானதாகும்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!