வடமாகாணத்தில் கடவுச்சீட்டு (Passport ) வழங்கும் பிராந்திய அலுவலகங்கள் மற்றும் சேவைகள்
#SriLanka
#NorthernProvince
#Passport
#Lanka4
#Office
Prasu
2 hours ago

வடமாகாணத்தில் கடவுச் சீட்டு (Passport )வழங்கும் பிராந்திய அலுவலகங்கள்
- யாழ்ப்பாணத்தில் - மாவட்ட செயலகத்திலும்
- வவுனியாவில் - வவுனியா மன்னார் வீதியில் சிங்கள மகா வித்தியாலயத்திற்கு முன்னாலும் அமைந்துள்ளது.
சேவைகள்
- கடவுச்சீட்டு விநியோகித்தல் (ஒருநாள் சேவை, சாதாரண சேவை )
- கடவுச்சீட்டுக்களில் திருத்தங்கள் மேற்கொள்ளல்.
- 2018 இன் பின்னர் 15 வயதிற்கு மேற்பட்டோரால் வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட கடவுச்சீட்டுக்கான விரலடையாளத்தை பதிவு செய்தல். (Finger Print)
நடைமுறைகள்
காலை 7.00 மணி தொடக்கம் நண்பகல் 2.00 வரை ஒருநாள் மற்றும் சாதாரண சேவைக்கான விண்ணப்பங்களைக் ஏற்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
எந்தவிதமான முற்பதிவுகளும் தேவையில்லை.
தேவையான ஆவணங்கள்
- பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம்
- பிறப்பு அத்தாட்சி பத்திரம் ( அசல்-Original ) தெளிவானதாக இருத்தல் வேண்டும்.
- புகைப்படம் (Online Photo )- (பாஸ்போட் அலுவலகத்திற்கு உள்ளே போக முதலே அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரூடியோவில் புகைப்படம் எடுக்கலாம்)
- தேசிய அடையாள அட்டையும் அதன் பிரதியும் ( தங்கள் தற்போதய தோற்றத்துடன் அடையாள அட்டையிலுள்ள புகைப்படம் ஒத்துப்போகவில்லை என்றால் அடையாள அட்டையை புதுப்பித்து கொண்டு செல்லுங்கள் )
- ஏற்கனவே கடவுச்சீட்டு இருந்தால் அதனையும் அதன் பிரதியையும் கொண்டு செல்லுங்கள்.
- திருமணமான பெண்கள் கணவனின் பெயரில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள விரும்பின் திருமண சான்றிதழை (Original) கொண்டு செல்லுங்கள்.
- சான்றிதழ்களின் ஆங்கில மொழி பெயர்ப்புத் தேவையில்லை.
- பதினைந்து வயதுக்கு உட்பட்ட பிள்ளையின் கடவுச்சீட்டு புதுப்பிப்பதாயின் தாய், தந்தை இருவரும் கட்டாயம் நேரில் செல்ல வேண்டும். தாய் தந்தை இருவரினதும் சம்மத கடிதம் (concern letter) மற்றும் தேசிய அடையாள அட்டை பிரதி இணைக்கப்பட வேண்டும்.
பெற்றோரில் ஒருவர் வெளிநாட்டில் இருந்தால் வெளிநாட்டு தூதரகத்தில் சம்மதம் தெரிவித்து கடிதம் மற்றும் சான்றுப்படுத்திய கடவுச்சீட்டு பிரதியினையும் பெற்று அதனை இணைக்க வேண்டும் ( No Objection Letter)
பெற்றோரில் ஒருவர் மரணமடைந்து இருந்தால் மரண சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.பெற்றோர் விவாகரத்து பெற்றிருந்தால் நீதிமன்ற கட்டளை அவசியமானது . பிள்ளையின் கட்டுக்காவல் பராமரிப்பு எந்த பெற்றோரிடம் உள்ளதோ அவரே பிள்ளையின் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
- கடவுச்சீட்டு தொலைந்திருந்தால் பொலிஸ் முறைப்பாட்டு் பிரதி அவசியமானது.
கட்டணங்கள்
- ஒருநாள் சேவை - 20,000.00
- சாதாரண சேவை- 10,000.00
- திருத்தங்கள் - 1200.00
- தொலைந்த கடவுச்சீட்டு எனின் தண்டப்பண விபரம்:
- வழங்கப்பட்டு ஒரு வருடத்திற்கு உட்பட்டது -20,000.00
- வழங்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேற்பட்டது-15,000.00
விண்ணப்ப படிவங்களைப் பெற்றுக்கொள்ள :
http://www.immigration.gov.lk/pages_e.php?id=24
(வீடியோ இங்கே )



