ஊழலற்ற இலங்கையின் தற்போதைய திட்டங்கள் குறித்து உலக வங்கி பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!

ஊழலற்ற இலங்கையின் தற்போதைய திட்டமங்கள் குறித்து சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அதன் ஊடாக இலங்கைக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக வங்கி பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய வலய உப தலைவர் ஜொஹன்னஸ் சட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்தில் அநுரகுமாரவை சந்தித்தபோது இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணி பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச அளவில் ஊழல் நிறைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்ட இலங்கை, தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான திட்டத்தின் காரணமாக பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் படிப்படியாக ஸ்திரமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



