அரகலய போராட்டம் - முன்னாள் எம்பிகளுக்கு சலுகை விலையில் வழங்க திட்டமிட்டிருந்து வீட்டு திட்டம் இரத்து!

இலங்கையில் ஏற்பட்ட “அரகலய” புரட்சியின் போது எரியூட்டப்பட்ட எம்.பி க்களின் வீடுகளுக்கு பதிலாக அப்போதைய அரசு “வியத்புர” வீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கான வீடுகளை சலுகை விலையில் வழங்க முடிவெடுத்திருந்தது.
குறித்த வீட்டுத் திட்டத்தில் வீடுகளை பெற்றுக் கொள்வதற்காக 29 (முன்னாள்) பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது வீட்டின் பெறுமதியில் 25% செலுத்தியிருந்தனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடுகளை சலுகை விலையில் வழங்க எடுத்த தீர்மானித்தினால் அரசுக்கு 90 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக அரசாங்க ஊடக பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை சலுகை விலையில் கொடுப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த முடிவை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்வதாகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் பொதுமக்களுக்கு விற்கப்படும் அதே விலையில் வீடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் வீடுகளை சலுகை விலையில் பெற்றுக்கொள்ள வீட்டின் விலையில் 25% பணத்தை செலுத்திய முன்னாள் எம்பிக்களின் பெயர் பட்டியலும் வெளியாகியுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



