மயக்கம் தெளிந்த மைத்திரி! அடுத்த கட்டம் மஹிந்தவுடனா கூட்டு?

#SriLanka #Mahinda Rajapaksa #Maithripala Sirisena
Mayoorikka
2 hours ago
மயக்கம்  தெளிந்த மைத்திரி! அடுத்த கட்டம் மஹிந்தவுடனா கூட்டு?

மஹிந்த ராஜபக்ஷவை போல் நான் மக்களை அழைத்து வருவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பில் உள்ள வீட்டில், ஊடகவியலாளர்கள் திங்கட்கிழமை சந்தித்தனர். அவர்கள் கேட்ட கேள்விக்கு மைத்திரிபால சிறிசேன அளித்த பதில்…

 ஊடகவியலாளர்: உத்தியோகபூர்வ இல்லத்தை கைவிட்டு விட்டீர்கள் இப்போது எப்படி? மைத்திரிபால: “பொருட்களை ஏற்றுகிறோம், இரண்டொரு நாளில் நாங்கள் சென்றுவிடுவோம்”.

 ஊடகவியலாளர்: இன்னும் கொழும்பு வீட்டில் தான் இருக்கின்றீர்கள்

 மைத்திரிபால: “இல்லை, இல்லை, தங்கி இருக்கின்றீர்கள் என்றால், இன்னும் இரண்டொரு நாட்களுக்கு இருப்போம், பொருட்களை ஏற்றுகிறோம். இன்னும் சில வேலைகளை செய்யவேண்டியுள்ளது”.

 ஊடகவியலாளர்: இது பழிவாங்கலா? இல்லையேல் நல்லதா?

 மைத்திரிபால: ”முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டமாகும். அந்த சட்டத்தின் பிரகாரம், முன்னாள் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போதைய அரசாங்கம் அந்த சட்டத்தை ரத்து செய்து போக சொன்னார்கள் நாங்கள் போகிறோம். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை

”. ஊடகவியலாளர்: மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது. உங்களுக்கு எப்படி

 மைத்திரிபால: இல்லை… இல்லை… நான் யாரையும் அழைத்து வரமாட்டேன்.

 ஊடகவியலாளர்: மஹிந்த ராஜபக்ஷவை சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடுவதை நாங்கள் கண்டோம். உங்களைப் பார்க்க யாரும் வரவில்லையா?

 மைத்திரிபால: இல்லை, இல்லை. நான் மக்களை அழைத்து வருவதில்லை.

 ஊடகவியலாளர்: அதாவது, மக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர், இல்லையா?

 மைத்திரிபால: நான் மக்களை அழைத்து வருவதில்லை என சிரித்துக்கொண்டே கூறிவிட்டு, அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுவிட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!