மஹிந்தவின் காற்றில் நாமலின் வாசம்! உருவாகின்றது புதிய அரசியல் முயற்சி
#SriLanka
#Mahinda Rajapaksa
Mayoorikka
1 month ago
“Mahinda Sulangin Namal Suwanda” (மஹிந்தவின் காற்றில் நாமலின் வாசம்) என்ற தலைப்பில் ஒரு புதிய அரசியல் முயற்சி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பிறகு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி பதவியை இழந்த பிறகு “Mahinda Sulanga” இயக்கம் தொடங்கப்பட்டது போலவே, குறித்த புதிய அரசியல் முயற்சியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
