மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களின் ஒன்றான இரட்டை மாட்டுவண்டி சவாரி போட்டி

#SriLanka #Mannar #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Soruban
3 months ago
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களின் ஒன்றான இரட்டை மாட்டுவண்டி சவாரி போட்டி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களின் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை நானாட்டான் வாழ்க்கை பெற்றான் கண்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சவாரி சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த போட்டியில், பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக நானாட்டான் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த போட்டியில் வடமாகாணத்தில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் மற்றும் உரிமையாளர்கள் குறித்த போட்டியில் கலந்து கொண்டிருந்ததோடு, குறித்த போட்டியில் நூறு கோடிக்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தது.

மிகவும் சிறப்பாக இடம்பெற்ற குறித்த போட்டியில் ,A.B.பிரிவுகளில் கிளிநொச்சி மாவட்ட காளைகளும்,C.D.E ஆகிய பிரிவுகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளும், வெற்றியீட்டியது.

குறித்த போட்டியில் வெற்றி பெற்ற காளை களின் வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!