போதையை ஒழித்தாலே நாட்டை முன்னேற்ற முடியும்!

நாட்டில் போதையை ஒழித்தாலே எதிர்காலத்தில் நல்ல இழைஞர் யுவதிகள் உருவாகுவார்கள் இந்த நல்ல இழைஞர் யுவதிகளாலேயே நாட்டை முன்னேற்ற முடியும்.
ஜனா திபதி அனுரகுமார திசாநாயக்க இதனை செய்ய வேண்டும். இதை அனுரா செய்வாரா?
அத்துடன் நாட்டில் கட்டாய மும்மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்தினாலே நாட்டை இழைஞர்கள் முன்னேற்றுவார்கள்.
தற்பொழுது நாட்டில் போதையால் மட்டும் தான் பல களவுகள், கொலைகள், கற்பழிப்புக்கள், தற்கொலைகள், குடும்ப பிரிவுகள், மன அழுத்தங்கள், கல்வி குறைபாடுகள்,, அங்கவீனங்கள், விபத்துக்கள், கள்ளக் கடத்தல்கள், குழு சண்டைகள் போன்ற சட்ட விரோத செயல்கள் நடைபெறுகின்றன.
ஆகவே போதையை ஒழித்தாலே அரைவாசி பிரச்சனையும் தீர்ந்துவிடும்.
உலக நாட்டுகளில் இலங்கை பெற்ற கடனை அடைக்க இளைஞர்களின் கல்வி தரத்தை உலக தரத்துக்கு உயர்த்த வேண்டும். அதனால் வரும் அன்னிய செலவாணிகளால் கடனை அழிக்க முடியும்.
ஜனாதிபதியோ அல்லது அவரோடு இருக்கும் கட்சியினராலோ மட்டும் இலங்கையை முன்னேற்ற முடியாது. மக்களும் ஒத்துழைக்கவேண்டிய அவடியம் உள்ளது.
அவ்வாறே நாட்டை உயர்த்த முடியும். நாட்டில் ஆழும் கட்சியை விட எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு மிக முக்கியம். எனவே வென்ற கட்சியினருக்கு மக்களும் எதிர்க்கட்சிகளும் சமூக பொறுப்போடு ஒத்துழைக்க வேண்டும்.
மக்களின் நலன்கருதி லங்கா4 ஊடகம் இதனை தெரிவிக்கின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



