மனிதவுரிமைகளில் வெளிப்புற தலையீடு தேவையில்லை: ஐநாவில் முற்றாக நிராகரித்த இலங்கை
#SriLanka
#Geneva
#UN
Mayoorikka
8 hours ago

மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது வழிமுறைகளையும் இலங்கை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தமது அறிக்கையை முன்வைத்தார்.
அந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் பதில் வழங்கிய வௌிவிவகார அமைச்சர், உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக மாத்திரமே பொறுப்புக்கூறல் செயல்முறைக்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



