வடக்கு கிழக்கிற்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு!
#SriLanka
Mayoorikka
1 hour ago
கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (06) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
எனவே மின்னலால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
