துயிலுமில்லங்களில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்படுவர்! சந்திரசேகரன்
மாவீரர்களை நினைவு கூறுவதற்கு நூற்றுக்கு 200 சதவீதமான முழு உரிமையும் தமிழ் மக்களுக்கு உள்ளது. ஆகவே இராணுவத்தினத்தின் வசமுள்ள துயிலுமில்லங்கள் அனைத்தையும் விடுவிக்குமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநரும் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் இன்று மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இந்திய மீனவர்களின் பிரச்சினை மற்றும் தமிழ் மக்களின் காணி விடுப்பு உள்ளிட்டவை தொடர்பில் ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்து தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய அரசாங்கமானது தமிழ் மக்களின் பல காணிகளை விடுவித்து வரும் நிலையில் துயிலும் இல்லங்களில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரையும் முற்றும் முழுதாக அந்தப் பகுதியில் இருந்து விடுவித்து மக்களை அவர்களின் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முழு உரிமையையும் வழங்கும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாதுகாப்புச் செயலாளருக்கு இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர்துயிலும் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு அமைவாக மிக விரைவாக இராணுவம் நிலை கொண்டுள்ள துயிலும் இல்ல காணிகளை விட்டு வெளியேற உள்ளதாக கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
