கைது முதல் பிணை வரை ரணில் வழக்கு!

உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பேசப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயம் இன்று தற்காலிகமாகத் தணிந்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதித்ததை அடுத்தே, ஏற்பட்டிருந்த தீவிர நிலை தணிந்துள்ளது.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ரணில் விக்ரமசிங்க, கடந்த வெள்ளிக்கிழமையன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதி வழங்கினார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, பிரதிவாதியின் நோய் நிலைமையைக் கருத்திற்கொண்டே இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட் டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக மேலதிக சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் ஆஜரானார். சந்தேகநபரான ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன மற்றும் அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு ஆஜரானது. இருப்பினும், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்குவதை சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்த்தது. அதன்படி, அந்த மருத்துவ நிலைமைகள் தொடர்பான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி சிறிது காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதய திசு இறப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் , முன்னாள் ஜனாதிபதி ரணில் இங்கிலாந்து சென்றிருந்தபோது எந்த அரச தலைவரையும் சந்திக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதி வழங்கினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



