பிரெஞ்சு ஜனாதிபதியை சந்தித்த இந்திய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
Xல் ஒரு பதிவில், பிரதமர் மோடி, “எனது நண்பர் ஜனாதிபதி மக்ரோனுடன் மிகச் சிறந்த உரையாடலை மேற்கொண்டேன். உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்” என்று பதிவிட்டிருந்தார்.
“இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம்,” என்று பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, மக்ரோன் Xல், “நான் பிரதமர் @NarendraModi உடன் இப்போதுதான் பேசினேன். உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான வலுவான உத்தரவாதங்களுடன், ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நோக்கி நகரும் பொருட்டு, உக்ரைன் போர் குறித்த எங்கள் நிலைப்பாடுகளை ஒருங்கிணைத்தோம்.” என்று பதிவில் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



