கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!

#SriLanka #Airport #Rule #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!

கட்டுநாயக்க - பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வானூர்தி நிலைய மற்றும் வானூர்தி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையான காலப்பகுதியினுள், பயணிகளுடன் வருபவர்கள், வானூர்தி நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில், வேலைபளுமிக்க நேரங்களில், பயணிகளுக்கு தாமதமின்றி சேவையை வழங்குவதற்கும், சனநெரிசலை முகாமை செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வானூர்திப்பயணிகள் மற்றும் வானூர்தி நிலையத்தை பயன்படுத்துபவர்களின் வசதி கருதி இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!