இலங்கைக்கு மகிழ்ச்சியான தகவல்: பிரிட்டன்

பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்காக, பரந்த அளவிலான பொருட்களுக்குக் குறைந்த அல்லது பூச்சிய வரிகள் உட்பட இலவச வர்த்தக நிபந்தனைகள் வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளதாக, இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த வசதி ஆடைப் பொருளைச் சார்ந்திருக்கும் என்று இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆடை உற்பத்தியாளர்களுக்கு, பிரித்தானிய சந்தையில் முன்னோடியில்லாத அணுகலை வழங்கும் தாராளமயமாக்கப்பட்ட வர்த்தக விதிகளின் விவரங்களைப் பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
தாராளமயமாக்கப்பட்ட விதிகளின் கீழ், புதிய வசதிகள் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து செயல்படுத்தப்படும்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் இப்போது பிரித்தானியாவில் வரி இல்லாமல் நுழைய அனுமதிக்கப்படும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



