வரலாறு காணாத உச்சம் தொட்ட கொழும்பு பங்குச் சந்தை!
#SriLanka
#Colombo
#stock_market
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 hour ago

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் (ASPI) இன்று முதல் முறையாக 20,000 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்தது, இது மூலதனச் சந்தை வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
அதன்படி, ASPI இன்று (15) 20,218.36 புள்ளிகளின் புதிய உச்சத்தில் நிறைவடைந்தது, இது முந்தைய முடிவை விட 289.69 புள்ளிகள் (1.45%) அதிகமாகும்.
ஆகஸ்ட் 04 அன்று வர்த்தகத்தின் போது குறியீடு 20,000 புள்ளிகளை தாண்டிச் சென்றிருந்தாலும், அன்றைய வர்த்தகம் முடிவதற்குள் அதன் மதிப்பு 20,000 புள்ளிகளுக்குக் கீழே சரிந்தது.
இதற்கிடையில், S&P SL 20 குறியீடு இன்று 114.26 புள்ளிகள் அதிகரித்து 5,894.84 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இன்றைய விற்றுமுதல் ரூ. 9.54 பில்லியனுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



