செந்தில்குமரன் அறக்கட்டளையால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட உதவி பொருட்கள்!

மருத்துவமனைகளுக்கு பல உதவிகளை செய்து வரும் உயிர் காக்கும் சத்திர சிகிச்சைகள், மருத்துவமனைகளுக்கான உபகரணங்கள் வழங்குதல், வறுமைக் கோட்டில் வாழும் மக்களுக்கான மருத்துவ வாழ்வாதாரம் மற்றும் கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவ சேவைகள் போன்றவற்றை வழங்கி வருகின்ற செந்தில்குமரன் அறக்கட்டளை நிறுவனத்தினர் நேற்று (15.08) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கி வைத்தார்.
செந்தில்குமரன் அறக்கட்டளை நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் வானன் அவர்களினால் 18 லட்சம் பெருமதியான வைத்திய உபகரணமான இரத்த அழுத்த பாவையிடும் கருவி, இதைய துடிப்பை கண்டரியும் கருவி மற்றும் மடிக்கணனி ஆகிய பொருட்கள் மாவட்ட வைத்திசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரபாத் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உபகரணம் வழங்கும் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பொது மாவட்ட வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் தயாழினி, இதைய வைத்திய நிபுனர் த.ஜெயகாந் வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



