மன்னாரில் மணல் அகழ்வை மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய நிறுவனம்

#Mannar #Australia #company #Import #Sand
Prasu
1 hour ago
மன்னாரில் மணல் அகழ்வை மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய நிறுவனம்

மன்னார் மக்களுக்கு மணல் அகழ்வினால் ஏற்படும் ஆபத்துபற்றி தெரியவில்லை. மன்னார் மக்களுக்கு எப்பொழுதும் மன்னாரில் என்ன நடக்கிறது என்பது இறுதியாகவே தெரியவருகின்றது. உங்களுக்கு தெரியுமா மன்னார் அழகிய தீவின் பெரும்பாலான பகுதி தைத்தேனியம் என்ற மணல் அகழப்பட்டு ஏற்றுமதி செய்யப்படவிருப்பது?

இதற்கான ஆராய்ச்சி கற்கை கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு பிரதேசங்களில் ஆழ்துளையிடப்பட்டு மண்பரிசோதனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிறுவனம் லாபமீட்டுவதற்காக எம் மன்னார் மக்களை கடலுக்குள் தள்ளிவிடும் முயற்சியாகும்.

தைத்தேனியம் சான்ற்ஸ் நிறுவனம் (Titanium Sants Ltd) உயர்தரமான பெறுமதிமிக்க மற்றும் வெடிக்கும் தன்மைவாய்ந்த மணல் படுக்கைகளை இலக்காக கொண்டு செயற்படுகின்றது. 

இந்த நிறுவனமானது இலங்கையின் வடமேற்கில் அமைந்துள்ள மன்னார் தீவில் உயர்தரமான லுகோக்சன் பெறும் செயற்திட்டத்திற்காக சிறினால் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் (srinal holdings limited company) ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. 

அதன் தொடர்ச்சியாக இப்பொழுது தைத்தேனியம் வளங்களைத் தோண்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போது நாட்டில் உள்ள கொரோனா நிலைமை அவர்களுடைய திட்டத்தினை தாமப்படுத்தினாலும் மிக விரைவில் மண்ணகழ்வு வேலையினை மீள ஆரம்பிப்பார்கள். 

மன்னர் தீவின் பெரும்பகுதி ஏலவே கடல் மட்டத்திற்கு கீழுள்ள நிலப்பிரதேசம். மண்ணகழ்விற்கு உள்ளுர் மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டபோதும் வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து அவர்கள் விரும்பியதினை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 

எப்படி நாங்கள் இந்த அநியாயத்தினை எதிர்த்து போராடுவது? குறைந்தது சரியான தகவல்களை பெறுவதிலிருந்து ஆரம்பிப்போமா? தைத்தேனியம் சான்ஸ் நிறுவனத்தின் அறிக்கை பின்நூட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!