மட்டக்களப்பில் மீன் பிடிக்க சென்ற 50 வயது நபர் மரணம்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் காரைக்காடு பிரதேசத்தில் உள்ள நீர் தேங்கிநிற்கும் குழிக்குள்மீன் பிடிக்கச் சென்ற ஒருவர், ஆழமான பகுதிக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் காணாமல் போனவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது அவர் சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்தவர், வேப்பவெட்டுவான் பாலர்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான 50 வயது ஜோசப் தவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர், சட்டவிரோத மணல் அகழ்வாளர்களால் தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர், முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன்; மட்டு போதனா வைத்தியசாலையிலிருந்து உடற்கூற்று பரிசோதனை முடிந்ததையடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



