பிரான்சில் காவல்துறை வாகனம் மோதி உயிரிழந்த 17 வயது இளைஞன்

எசோனில் உள்ள பியேவ்ர் பகுதியில் N118 சாலையில் காவல்துறையினரின் வாகனம் மோதி 17 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த இளைஞர், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரில் ஒருவர்.
காவல்துறையினரால் துரத்தப்பட்ட இவர், வேகமாக ஓடிய போது நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளார். அதே நேரத்தில் வந்த காவல்துறை வாகனம் அவர் மீது மோதியதால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது நண்பர் பிடிபட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இரண்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒன்று மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் காவல் துறையினரின் கட்டளையை மீறியதைக் குறித்தது; மற்றொன்று காவல்துறை வாகனம் இளைஞரை மோதி உயிரிழப்புக்கு காரணமானதையைக் குறித்த “தற்செயலான கொலை” விசாரணை.
சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினரும் மன உளைச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை சங்கங்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன, மேலும் இளைஞரின் குடும்பத்திற்கும் காவல் துறையினருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



