5ஆவது நாள் ஆட்டத்தின்போது சிராஜ் உடன் நடைபெற்ற வாக்குவாதம்

#India #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
17 hours ago
5ஆவது நாள் ஆட்டத்தின்போது சிராஜ் உடன் நடைபெற்ற வாக்குவாதம்

கடைசி விக்கெட்டுக்கு பேட்டிங் செய்ய முடியாத நிலையில் கிறிஸ் வோக்ஸ் களம் இறங்கினார். மறுமுனையில் அட்கின்சன் விளயைாடினார். 

அப்போது இங்கிலாந்து அணிக்கு 17 ரன்கள் தேவை. அட்கின்சன் அதிரடியாக விளையாட முடிவு செய்தார். அதேவேளையில் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து, மீண்டும் ஸ்டிரைக் எடுத்துக் கொள்ள முடிவு செய்தார். இந்த நிலையில்தான் சிராஜ் வீசிய 84ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் அட்கின்சன் சிக்ஸ் அடிப்பார். 

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. அப்போது சுப்மன் கில்லுக்கும், சிராஜுக்கும் இடையில் லேசான வாக்குவாதம் எற்பட்டது போன்ற வீடியோ வெளியானது. இதையும் படியுங்கள்: ஓவல் டெஸ்டின் கடைசி நாளில் இங்கிலாந்து பயந்துவிட்டது- முன்னாள் கேப்டன் வாகன் விமர்சனம் இதுகுறித்து சுப்மன் கில் தற்போது விவரித்துள்ளார்.

இது தொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது:- 84ஆவது ஓவரின் கடைசி பந்தை அட்கின்சன் எதிர்கொள்வார். அப்போது முகமது சிராஜ் உடன் ஆலோசிக்கும்போது சிக்ஸ் அடிக்க முடியாத வகையிலும், அதேவேளையில் சிங்கிள் ரன் ஓடாத முடியாத வகையில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் வகையிலும் பந்து வீச திட்டமிடப்பட்டது. 

அப்படி வீசினால் Bye ரன் ஓட முடியாத வகையில் ஜுரெலை விக்கெட் கீப்பிங் கையுறையை கழற்றி ரன்அவுட் செய்ய தயாரான நிலையில் இருக்க சொல்லும்படி என்னிடம் சிராஜ் தெரிவித்தார். என்னிடம் தெரிவித்த உடன் அவர் பந்து வீச சென்றுவிட்டார். நான் ஜுரெலிடம் தெரிவிப்பதற்கு முன் சிராஜ் பந்து வீச ஓடி வந்து விட்டார்.

இதனால் ஜுரெலால் கையுறையை கழற்ற முடியவில்லை. ஆகவே, கடைசி பந்தில் Bye மூலம் ஒரு ரன் ஓடினர். எங்கள் திட்டம் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் முகமது சிராஜ் என்னிடம் வந்து, ஜுரெலிடம் திட்டத்தை சொன்னியா? எனக் கேட்டார். இதனால் சற்று வாக்குவாதம் ஏற்பட்டது. நான் அவரிடம் விளக்கமாக கூறினேன். இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்தார். 84ஆவது ஓவரில் இங்கிலாந்து 7 ரன்களும், அடுத்த ஓவரில் 3 ரன்களும் அடித்தது. இதனால் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிராஜ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் அட்கின்சன் க்ளீன் போல்டானார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754432672.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!