பிரான்சில் இருந்து நாட்டுக்கு அச்சுறுத்தலான 64 பேர் நாடு கடத்தல்
#France
#people
#Terrorists
#extradite
Prasu
3 hours ago

இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதம் போன்ற செயற்பாடுகளில் தொடர்புபட்ட 64 பேர் இவ்வருடத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Bruno Retailleau தெரிவித்தார்.
நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள் எனும் பட்டியல் கொண்ட Fiche S கோப்பில் உள்ளவர்களில் இருந்து அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
இவ்வருடத்தில் இதுவரை 64 பேர் அவ்வாறாக வெளியேற்றப்பட்டதாகவும், 5,100 பேரின் விபரங்கள் Fiche S கோப்பில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இவ்வருட இறுதிக்குள் மேலும் புதிதாக பலர் வெளியேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



