பிரித்தானியாவில் பாதுகாக்கப்படும் புத்தகங்களை யாழ் நூலகத்திற்கு பெற நடவடிக்கை!

1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டபோது அழிந்த அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள் சார்ந்த வரலாற்று நூல்களை வன்பிரதியாகப் பெறவும், அவற்றை இணையத்தின் மூலம் அணுகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாநகர சபை உறுப்பினர் சு. கபிலன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த பிரதமர் ஹரினி அமரசூரியாவிடம், நூலகம் தொடர்பான தனது கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அதற்கு பிரதமர் முழுமையான ஆதரவு வழங்க உறுதியளித்ததாகவும் கபிலன் கூறினார்.
பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக, 1800கள் முதல் 1950கள் வரையிலான காலகட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் பிற பகுதிகள் குறித்த நூல்கள், பிரித்தானிய நூலகத்தில் இலத்திரனியல் வடிவத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை யாழ்ப்பாண நூலகத்தில் இருந்து இணையவழியில் அணுகும் வசதியை ஏற்படுத்துதல்.
அதே காலகட்டத்தைச் சேர்ந்த நூல்களை வன்பிரதியாக அச்சிட்டு யாழ்ப்பாண நூலகத்திற்கு கொண்டு வருதல். நெதர்லாந்து பல்கலைக்கழகங்களிலும் சில அரிய நூல்கள் இருப்பதாகவும், இதுகுறித்த ஆதாரங்கள் கிடைத்ததும் அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கபிலன் தெரிவித்தார்.
இந்த முயற்சிகள் மூலம் 1981ஆம் ஆண்டு தீக்கிரையாக்கப்பட்ட நூலகத்தில் இருந்த சில அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மீண்டும் பெற முடியும் என்றும் சு. கபிலன் நம்பிக்கை தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



