சுவிஸ் உண்மையான புலிகளின் அறிக்கை - 02.08.2025 நடக்க இருக்கும் நிகழ்வு தொடர்பாக

#Switzerland #Protest #Tamil People #Lanka4 #organization
Prasu
15 hours ago
சுவிஸ் உண்மையான புலிகளின் அறிக்கை - 02.08.2025 நடக்க இருக்கும் நிகழ்வு தொடர்பாக

சுவிஸ் நாட்டில் 02.08.2025 புலி இயக்கத்தால் தலைவருக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அதனை எதிர்த்து போராட்டம் நடத்துபவருக்கும் உண்மையான சுவிஸ் அமைப்புக்கும் தொடர்பு இல்லை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.. 

தமது பெயரை கெடுக்க இரு தரப்பு முயல்கிறது. எனவே யாரும் கலந்துகொள்வது அவரவர் விருப்பம் என்று உண்மை புலிகள் தெரிவித்துள்ளது.

சுவிஸ் மண்ணில் தங்களது கட்டமைப்புக்களை குறிவைத்து பல நாசகார வேலைத்திட்டங்கள் நடந்து வருவதாக தமிழீழ விடுதலை புலிகள் சுவிஸ் கிளை குறிப்பிட்டுள்ளது.

குறித்த நாசகார வேலைத்திட்டங்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட கண்டன செய்தியிலேயே இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நாம் ஏற்கனேவே தெரியப்படுத்தியமை போல் தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளைக்கும் மற்றும் சுவிஸ் தமிழர் ஒருகிணைப்புக் குழுவுக்கும் 02.08.2025 அன்று நடைபெறவிருக்கும் நிகழ்வுக்கும் எவ்வித தொடர்பு இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருந்தோம்.

தற்பொழுது 02.08.2025 அன்று நடைபெறும் நிகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்துவதாக கூறி தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை சின்னத்தைப்பயன்படுத்தி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை ஆகிய எங்களுக்கும் இந்த அழைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.

அது மட்டுமின்றி இந்த அழைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையில் இருந்து வெளியேற்றப்பட்ட எமது தேசியத்திற்கு எதிரானவர்களாலும் முன்னெடுக்கப்படுகின்றது என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கின்றோம் என தமிழீழ விடுதலை புலிகள் சுவிஸ் கிளை குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753819667.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!