காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்: வழக்கில் சாட்சியமளிக்கத் தயார்! கோட்டாபய அதிரடி
#SriLanka
#Gotabaya Rajapaksa
#Lanka4
#Court
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
1 month ago

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பான வழக்கானது, காணாமல் போன இரண்டு மனித உரிமை ஆர்வலர்களினதும் உறவினர்களினால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



