அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம் - பிரான்ஸ் கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இடையே ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை பிரான்ஸ் விமர்சித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இது ஒரு இருண்ட நாள் என்று பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பேய்ரூ சாடியுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்பின் கண்மூடித்தனமான வரி அழுத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் பணிந்து விட்டது என்றும் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட பிரான்சுவா பேய்ரூ, தங்கள் பொதுவான மதிப்புகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சுதந்திர நாடுகளின் கூட்டணி, அழுத்தத்தின் கீழ் மண்டியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்றார்.
அதே வேளை, பிரெஞ்சு ஐரோப்பிய விவகார அமைச்சர் பெஞ்சமின் ஹடாட், இந்த நிலைமை நல்லதல்ல என்றும், ஐரோப்பிய ஒன்றியம் எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



