பிரான்சின் தீர்மானத்திற்கு எதிராக உலக தலைவர்கள் கண்டனம்

#France #America #Country #Israel #President #Palestine #condemn
Prasu
1 month ago
பிரான்சின் தீர்மானத்திற்கு எதிராக உலக தலைவர்கள் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கூறினார். 

இது பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த உதவும் என்று நம்புவதாக மேக்ரோன் கூறினார். இந்நிலையில் பிரான்சின் அறிவிப்புக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறுகையில், அத்தகைய நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாகவும், மற்றொரு ஈரானிய 'பினாமியை' உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் கூறினார்.

மேலும், "பாலஸ்தீன நாடு இஸ்ரேலை அழிப்பதற்கான ஒரு ஏவுதளமாக இருக்கும். பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் ஒரு நாட்டைத் தேடவில்லை. அவர்கள் இஸ்ரேலுக்குப் பதிலாக ஒரு நாட்டைத் தேடுகிறார்கள்," என்று நேதன்யாகு தெரிவித்தார். 

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவும் பிரான்சின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753518166.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!