முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான சமூக மத்தியஸ்த சபையின் கருத்தரங்கு!

முல்லைத்தீவு மக்களுக்கான சமூக மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் மற்றும் காணி மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (23) காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 01.30 வரை மாவட்ட செயலக முல்லைமணி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கின் வளவாளராக மத்தியஸ்த சபையின் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் திரு. ச.லக்ஸ்மன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இவர் தனது விரிவுரையில் மத்தியஸ்த சபையின் தோற்றம், செயற்பாடு, பிணக்குகளை தீர்க்கும் பொறிமுறை என்பவற்றுடன் மத்தியஸ்த சபையின் உறுப்பினர் நியமனம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



