23 நாடுகளை சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் பட்டியலில் சேர்த்த அமெரிக்க ஜனாதிபதி

#America #drugs #Country #Trump #World
Prasu
10 months ago
23 நாடுகளை சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் பட்டியலில் சேர்த்த அமெரிக்க ஜனாதிபதி

சட்ட விரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.

23 நாடுகளை கொண்ட அந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அவற்றின் தயாரிப்பில் முக்கியமாக ஈடுபட்டுள்ள இந்த நாடுகளின் செயலால் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அந்த பட்டியலில் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த குற்றச்செயல் தடுப்பில் தவறிவிட்டதாக ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியான்மர் உள்ளிட்ட 5 நாடுகளை குறிப்பிட்டு இருந்த அவர், போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்குமாறும் அந்த நாடுகளை கேட்டுக்கொண்டு உள்ளார்.

போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்த டிரம்பின் நடவடிக்கை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4