சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்: யாழிற்கு ஆடல் பாடலுடன் ரயிலில் வரும் குழுவினர்!!

#SriLanka #Jaffna #Travel #Train
Lanka4
1 week ago
சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்: யாழிற்கு ஆடல் பாடலுடன் ரயிலில் வரும் குழுவினர்!!

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு, சோஷலிசம் இளைஞர் சங்கத்தினர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து யாழ் தேவி ரயில் மூலம் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். 

இன்று காலை 06.30 மணியளவில் பயணம் ஆரம்பமான நிலையில் மாலை 2 மணியளவில் யாழ்ப்பாணத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த பயணத்தில் குருநாகல் புகையிரத நிலையத்தில் நூல்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.

images/content-image/2024/07/1753257065.png

அதுபோன்று அநுராதபுர புகையிரத நிலையத்திலும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகையிரதம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததும், யாழ்ப்பாண புகையிரத நிலைய நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெறும். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்படும். அங்கு கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நாளை எழுவைதீவுக்கு பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 200 பனங்கன்று நடுகை செய்யப்படவுள்ளதுடன், எழுவைதீவு பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள், மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753222781.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!