தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி: மூன்று பேர் கைது!!

#SriLanka #Arrest #Police #Kilinochchi #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
2 hours ago
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி: மூன்று பேர் கைது!!

தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக 04.08.2025 அன்றைய தினம் மாலை சூட்சுமமான முறையில் பயணப் பொதியில் மறைத்து பேருந்தில் எடுத்துச் செல்ல முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர் புளியம்பொக்கனைப் பகுதியில் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபரிடம் இருந்து 30 லீற்றர் கசிப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 05.08.2025 தருமபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக பெரியகுளம் கட்டைக்காட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் 50 லீற்றர் கசிப்பு 60 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754383182.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!